திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 மே 2024 (14:17 IST)

பள்ளி மாணவர்களின் பழைய பஸ் பாஸ் செல்லும? போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு..!

School Student
கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் ஜூன் 6-ம் தேதி திறக்கப்பட இருக்கும் நிலையில் புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை  காட்டி பயணம் செய்து கொள்ளலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 
 
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடந்துள்ள நிலையில் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஜூன் ஆறாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் குறித்த முக்கிய அறிவிப்பை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது
 
புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவர்கள் பழைய பஸ் காட்டி பயணம் செய்து கொள்ளலாம் என்று மாணவ மாணவியர்களுக்கு விரைவில் புதிய பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
 
புதிதாக சேர்ந்த மாணவர்களின் முழுமையான விவரங்கள் கிடைத்தவுடன் புதிய இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
Edited by Mahendran