செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 மே 2024 (11:13 IST)

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள்: இன்று வெளியாகிறது தரவரிசைப் பட்டியல்..!

college
அரசு கலை கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் கடந்த சில நாட்களாக விண்ணப்பித்த நிலையில் இன்று அதாவது மே 27ஆம் தேதி தரவரசை பட்டியல் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ள நிலையில் இதுவரை 2 லட்சத்து 58,527 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் விண்ணப்பம் கட்டணம் செலுத்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டு கலந்தாய்வில் 2.11 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதையடுத்து  இன்று முதல் விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல்  அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும்,  தரவரிசைப் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை தேதி மற்றும் முழு விவரங்கள் அவர்களது செல்போனுக்கு அனுப்பி வைக்கபப்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மே 28 முதல் ஜூன் 29-ம் தேதி வரை இருகட்டங்களாக நடத்தப்படும் என்றும் முதலாமாண்டு வகுப்புகள் ஜூலை 3-ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த விவரங்கள் வேண்டுமெனில்  www.tngasa.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran