ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 20 ஜூலை 2020 (20:31 IST)

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர் தற்கொலை

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விடுதியிலிருந்து பயிற்சி மருத்துவர் ஒருவர் திடீரென கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள ஒரு பயிற்சி மருத்துவர் ஒருவர் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் இன்று மூன்றாவது மாடியில் இருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது 
 
இந்த தற்கொலை செய்து குறித்து கேள்விப்பட்ட மருத்துவர்கள் மற்றும் சக மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்துகொண்டது உறுதியாகி உள்ளது 
 
இருப்பினும் இந்த தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பயிற்சி மருத்துவரின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட பயிற்சி மருத்துவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவரது மொபைல் போன் ஆய்வு செய்து செய்யப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன