படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்.. 200 ரயில்கள் இலக்கு! – ரயில்வே ப்ளான்!
சமீபத்தில் அமர்ந்து செல்லும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்களை தொடர்ந்து படுக்கை வசதி கொண்ட ரயில்களை தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இயங்கி வரும் இந்த வந்தே பாரத் ரயில்கள் அமர்ந்தபடி செல்லும் இருக்கை வசதி கொண்டவை. அவ்வபோது கால்நடைகள் மீது மோதுவதால் முன்பகுதி சிறிது சேதம் அடைந்தாலும், வந்தே பாரத் ரயில்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அடுத்தக்கட்டமாக நீண்ட தொலைவு செல்லும் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. படுத்து உறங்கும் வகையில் படுக்கை வசதிகளுடன் 200 ரயில்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் அழைப்பு பிப்ரவரி 2023க்குள் விடுக்கப்படும் என கூறப்படுகிறது.
Edit By Prasanth.K