1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (16:54 IST)

டிக்கெட் எடுக்காமல் ரிசர்வேஷன் பெட்டியில்..! வடமாநிலத்தவர் அட்டூழியம்! – திருவொற்றியூரில் நின்ற ரயில்!

Train
சென்னையிலிருந்து கவுஹாத்தி சென்ற ரயிலில் முன்பதிவு பெட்டியில் டிக்கெட்டே எடுக்காமல் இடமும் தராமல் பல வடமாநிலத்தவர் பயணித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்வோருக்கு தனிப்பெட்டிகள் ஒதுக்கப்படும் நிலையில், முன்பதிவு செய்யாமல் நேரடி டிக்கெட் பெறுபவர்களுக்கும் சில பெட்டிகள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் வடமாநிலத்தை சேர்ந்த பலர் எந்த டிக்கெட்டும் எடுக்காமலே எல்லா பெட்டிகளிலும் பயணிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் இந்த போக்கு அதிகம் உள்ளதாக பலரும் கூறுகின்றனர்.

இந்நிலையில் இன்று சென்னை வழியாக கவுஹாத்தி சென்ற எக்ஸ்பிரஸில் இந்த பிரச்சினை எழுந்துள்ளது. முன்பதிவு செய்தோருக்கு இடம் இல்லாமல் ரிசர்வேஷன் பெட்டிகள் முழுவதையும் வடமாநிலத்தவர் பலர் டிக்கெட் எடுக்காமலே நிரப்பி அமர்ந்துள்ளனர். 4 பேர் அமரக்கூடிய இருக்கையில் 7 பேராக அமர்ந்திருந்துள்ளனர்.

இதனால் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்தது. இதனால் ரயில் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் ரயில்வே போலீஸார் டிக்கெட் எடுக்காத 1000 வடமாநிலத்தவர்களை வெளியேற்றியுள்ளனர். பின்னர் ரயில் புறப்பட்டு சென்றுள்ளது. இந்த வகையான போக்கை தடுக்க ரயில்வே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்பதிவு செய்தோர் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Edit By Prasanth.K