ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 10 பிப்ரவரி 2024 (21:19 IST)

சந்தோஷ் நாராயணனின் இன்னிசை கச்சேரிக்கு மெட்ரோ ரயில் சேவை!

சந்தோஷ் நாராயணனின் நீயே ஒலி இன்னிசை கச்சேரி இன்று சென்னையில் நடந்து  வரும்  நிலையில்,  ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்து வழங்குவதற்காக  சென்னை மெட்ரோ ரயில்  நிறுவனம் தென்னிந்தியாவில் முன்னணி ஊடக தயாரிப்பு  நிறுவனமான மேக்கிங்  மொமென்ட்ஸ் உடன் இணைந்து மெட்ரோ சிறப்பு   சேவையை வழங்குகிறது,
 
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவர், அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
 
அதன்பின்னர், கபாலி, காலா, பைரவா,  கொடி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
 
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பணியாற்றி வருகிறார்.
 
இந்த நிலையில், இவரது நீயே ஒலி இன்னிசை கச்சேரி இன்று சென்னை, புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள நேரு அவுட்டோர் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்து வழங்குவதற்காக  சென்னை மெட்ரோ ரயில்  நிறுவனம் தென்னிந்தியாவில் முன்னணி ஊடக தயாரிப்பு  நிறுவனமான மேக்கிங்  மொமென்ட்ஸ் உடன் இணைந்து மெட்ரோ சிறப்பு   சேவையை வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.