ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (17:45 IST)

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி அலுவலகம் பதில்!

NEET
தமிழக அரசின் நீட் விலக்கு குறித்த மசோதா குறித்து ஜனாதிபதி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசு நீட் விலக்கு மசோதா இயற்றி அதை ஒப்புதலுக்காக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இம்மசோதாவுக்கு  விரைந்து ஒப்புதல் அளிக்க கோரி மதுரை எம்பி வெங்கடேசன் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்
 
இந்த கடிதத்திற்கு பதில் அனுப்பி உள்ள குடியரசுத் தலைவர் அலுவலகம் தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. உள்துறாஇ அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு பின்னர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
இது குறித்து மதுரை எம்பி சு வெங்கடேசன் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:  அனித்தாக்களின் கல்வி உரிமை; குடியரசு தலைவரின் பதிலும் 
முதல்வரின் பெயர் சூட்டலும். தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக் கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன்
 
உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக”  குடியரசு தலைவர் இன்று பதிலளித்துள்ளார். அரியலூர் மருத்துவ கல்லூரி அரங்கத்திற்கு அனிதாவின் பெயர் சூட்டி இன்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனித்தாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழகத்தின் கனவு அனித்தாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே
 
Edited by Mahendran