சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா? இன்னும் முடிவு செய்யவில்லை என கலெக்டர் தகவல்
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டை ஞாபகப்படுத்தும் வகையில் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வரும் நிலையில் கிட்டத்தட்ட இந்த வாரம் முழுவதுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதிக விடுமுறை அளிக்கபப்ட்டுள்ளதால் நாளை சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்று ஒருசிலர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததால் நாளை சென்னையில் பள்ளிகள் இயங்குமா? என்பது குறித்த கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது
இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களிடம் கூறிய சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன், 'சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுப்பு குறித்தோ அல்லது இயக்குவது குறித்தோ இன்னும் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறியுள்ளார்