வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 டிசம்பர் 2017 (07:33 IST)

நாளை: ஆர்.கே.நகர் வாக்குப்பதிவும், 2ஜி வழக்கின் தீர்ப்பும்

சென்னை ஆர்.கே.நகரில் நாளை காலை 8 முதல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நாளை காலை 10.30 மணிக்கு திமுகவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளது.

இந்த தீர்ப்பு திமுகவுக்கு பாதகமாக இருந்தால் நிச்சயம் அதன் தாக்கம் வாக்குப்பதிவில் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் தீர்ப்பு சாதகமாக இருந்தால், திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நாளை தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ராஜ்யசபா எம்பி கனிமொழி உட்பட குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.