திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (18:28 IST)

அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் இம்மாதம் 20 ஆம் தேதி  மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு வரவேண்டுமென அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் மார்ச் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளும் பெற்றோர்கள் கூட்டம் நடைபெறுவதால்  அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களும்  கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை ஆசியர்கள் பள்ளிக்கு வருவதன் காரணமாக  நாளை அதாவது மார்ச் 19 அம் தேதி ( சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது.