திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (18:19 IST)

ஏடிஎம் மையத்தில் ரூ.7.50 லட்சம் கொள்ளை...அதிர்ச்சி சம்பவம்

கடலூர் மாவட்ட கே.என் பேட்டையில் உள்ள ஏடிஎம் மையத்தில் ரூ.7  லட்சத்து  50000 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

 கடலூர் அருகேயுள்ளா கேஎன். பேட்டை என்ற கிராமத்தில் ஒரு தனியார் இயந்திரம் இயங்கி வருகிறது. இதில் நேற்று மாலை   7 மணிக்கு ஏடிஎம் மையத்தில் பணம் வைக்கும்  ஊழியர்கள்    4 பேர் ரூ   .  7 லட்சத்து 50 ஆயிரம் பணம்  வைத்துள்ளனர்.

இதனையடுத்து, 4 பேரில் ஒருவரான கிருஷ்ணகுமார் இரவில் தனியாகச் சென்று,  ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.7, லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். இன்று அதிகாலை வந்து  பார்த்த  ஏடிஎம் பராமரிப்பாளர் திருப்பாந்துரம்  காவல்  நி லையத்தில் புகார் அளித்தார்.