தமிழகத்தை அடுத்து புதுவை அரசு எடுத்த அதிரடி முடிவு!

pudhucherry
pudhucherry
siva| Last Updated: புதன், 25 நவம்பர் 2020 (21:01 IST)
வங்க கடலில் தோன்றிய நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் புயலினால் ஏற்படும் சேதங்களில் இருந்து பொது மக்களை காப்பாற்ற தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது என்பதும் பேரிடர் படையினர் விழிப்புடன் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஏற்கனவே நிவர் புயல் காரணமாக இன்று பொது அரசு பொது விடுமுறை என அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளையும் தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், ஆகிய 16 மாவட்டங்களில் அரசு விடுமுறை என அறிவித்துள்ளார்

இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து புதுவை அரசும் நாளை அரசு பொது விடுமுறை என அறிவித்துள்ளது. புதுவையிலும் நிவர் புயல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிட்டதாக புதுவை அரசு தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :