புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 ஜூலை 2023 (17:38 IST)

16 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அதில் மூன்று மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
 
இந்த நிலையில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை காஞ்சிபுரம் வேலூர் நெல்லை கன்னியாகுமாரி தேனி திண்டுக்கல் 16 மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளிலும் நாளை கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் ஜூலை 6ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரியில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு இடை மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் இன்று கடலூர் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 
Edited by Siva