அரியலூரில் நாளை முழு அடைப்பு: தமிழக அரசுக்கு சிக்கல்
ஏற்கனவே தமிழக அரசின் மெஜாரிட்டி குறித்த பிரச்சனையே இன்னும் தீராத நிலையில் அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் தமிழக அரசை பிரச்சனையின் உச்சத்திற்கு அழைத்து சென்றது
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருகிறோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்ததால்தான் அனிதா உள்பட பல மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகவில்லை. கடைசி நேரத்தில் மத்திய அரசும் மாநில அரசும் சுப்ரீம் கோர்ட்டில் சரியான வாதத்தை எடுத்து வைக்காமல் எதிர்த்திசையில் பயணம் செய்ததால்தான் இன்று ஒரு உயிர் அநியாயமாக போய்விட்டது.
இந்த நிலையில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு நாளை அரியலூர் மாவட்டத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி. பிரிவு சார்பில் வருகின்ற செப்டம்பர் 5-ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துவிட்டது. அரியலூரை அடுத்து அடுத்தடுத்த பல இடங்களில் போராட்டங்கள் வெடிக்கும் ஆபத்து உள்ளதால் தமிழக அரசுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.