1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2017 (15:43 IST)

பம்மாத்துக்குளம் ஏரி தண்ணீரால் மூழ்கியது பொத்தூர் சாலை: பொதுமக்கள் அவதி

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து ஏரிகள் உள்பட நீர்நிலைகள் அனைத்தும் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. 

\\

 
 
இந்த நிலையில் சென்னை அருகே உள்ள பம்மாத்துக்குளம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து ஏரியின் தண்ணீர் கரை புரண்டோடி பொத்தூர் சாலையை மூழ்கடித்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் போக்குவரத்துக்கு வழியின்றி கடும் அவஸ்தையில் உள்ளனர். எனவே இந்த பகுதி மக்களின் பிரச்சனையை தீர்க்க உடனடியாக பேரிடர் குழுவினர் வருகை தந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
மேலும் பெருகிவரும் நீர்மட்டம் காரணமாக பம்மாத்துக்குளம் ஏரியின் நீர் அதன் அருகில் உள்ள ரெட் ஹில்ஸ் நீர்த்தேக்கத்தை சென்றடைகிறது. இதனால் இந்த நீர்த்தேக்கத்தின் மட்டமும் உயர்ந்து வருகிறது.