வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 1 ஏப்ரல் 2021 (12:23 IST)

தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளில் மேலும் கட்டண உயர்வு!

தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் ஏற்கனவே அதிகமாக இருப்பதாக வாகன ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கப்பலூர், சாத்தூர் உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் ஐந்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வாகன உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் ஏற்கனவே சுங்க கட்டணம் மிக அதிகமாக உள்ளது என்றும் சுங்க கட்டணத்தை நீக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்று வாகன உரிமையாளர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது