திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 1 ஏப்ரல் 2021 (08:43 IST)

தமிழகம் மற்றும் புதுவையில் அமித்ஷா இன்று பிரச்சாரம்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேசிய தலைவர்கள் பலரும் தமிழகத்தை நோக்கி படை எடுத்து பிரசாரம் செய்துவருகின்றனர் 
சமீபத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி உள்பட பலர் பிரச்சாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பிரச்சாரம் செய்ய வருகை தருகிறார்
 
இன்று காலை 10 மணிக்கு புதுவையில் உள்ள கருவாடிகுப்பம் என்ற பகுதியிலும் 10.35 மணிக்கு லாஸ்பேட்டை என்ற பகுதியில் அமித்ஷா பிரச்சாரம் செய்கிறார். அதன் பிறகு மதியம் 12 15 மணிக்கு தமிழகத்தில் உள்ள திருக்கோயிலூரில் அவர் பிரச்சாரம் செய்வதாகவும் மாலை 4 மணிக்கு வேலாயுதம்பாளையத்தில் அவர் பிரச்சாரம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அமித்ஷாவின் தமிழகம் மற்றும் புதுவையை வருகையின் வெல்கம்அமித்ஷா என்றும் கோபேகமித்ஷா என்றும் இரு வேறு ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன
தமிழகம் மற்றும் புதுவையில் அமித்ஷா இன்று பிரச்சாரம்