1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 மார்ச் 2022 (17:40 IST)

சிவகாசி மாநகராட்சி: 11 அதிமுக கவுன்சிலர்களில் 9 பேர் திமுகவில் இணைந்ததால் பரபரப்பு

சிவகாசி மாநகராட்சியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் 11 பேர் வெற்றி பெற்ற நிலையில் அவர்களில் 9 பேர் திமுகவில் இணைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சிவகாசி மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் இருக்கும் நிலையில் அதில் 11 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் வெற்றி பெற்ற பதினோரு பேரில் 9 வார்டு கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்
 
 அவர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக கூட்டணி ஏற்கனவே 32 இடங்களில் வெற்றி பெற்று நிலையில் தற்போது திமுகவில் இணைந்து அதிமுக கவுன்சிலர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து 41 கவுன்சிலர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது