வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 12 ஜூலை 2021 (16:42 IST)

காசேதான் கடவுளடா ரீமேக்… கதாசிரியர் உரிமம் கேட்கும் இயக்குனர் குடும்பம்!

காசேதான் கடவுளடா படத்தின் கதாசிரியர் சித்ராலயா கோபுவின் குடும்பத்தினர் படத்தின் ரீமேக்குக்கான உரிமையைக் கோரியுள்ளனராம்.

தமிழ் சினிமாவில் வெளியான மிகச்சிறந்த நகைச்சுவை திரைப்படங்களில் ஒன்று ஏவிஎம் தயாரிப்பில் 1972 ஆம் ஆண்டு முத்துராமன் மற்றும் தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் காசேதான் கட்வுளடா. இந்த படம் அப்போது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்று வரை நகைச்சுவை படங்களில் கல்ட் கிளாசிக்காக உள்ளது. இந்த படத்தை ஸ்ரீதரின் வசனகர்த்தா சித்ராலயா கோபு இயக்கியிருந்தார். கதையையும் அவரே எழுதியிருந்தார்.

இந்நிலையில் இப்போது இந்த படம் ரீமேக் செய்யப்பட உள்ள நிலையில் கதாசிரியர் என்ற முறையில் அவருக்கான பணத்தைக் கொடுக்க வேண்டும் என கோபுவின் உதவியாளர்கள் கூறியுள்ளனராம். இது சம்மந்தமாக ஏவிஎம் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தையும் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.