1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. today Tamil Nadu corona virus status

தமிழகத்தில் இன்று 5,488 பேருக்கு கொரோனா: சென்னையில் எவ்வளவு?

தமிழகம்
தமிழகத்தில் இன்று 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் மொத்தமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5,30,908 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சென்னையில் மட்டும் 989 பேருக்கு கொரோனா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழகத்தில் இன்று 67 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர் என்பதும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தமாக 8685 பேர் கொரோனா காரணமாக பலி பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் தமிழகத்தில் இன்று 5525 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர் என்பதும், தமிழகத்தில் மொத்தமாக 4,75,717 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 46,506 பேர் தமிழகத்தில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர் என்றும், தமிழகத்தில் இன்று புதிய கேஸ்களை விட டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
எதிர்காலத்தை உருவாக்கும் தொழில்நுட்பங்கள்..!