இனிமே “நான் ஒரு விவசாயி”ன்னு சொல்லாதீங்க! – எடப்பாடியார் மீது ஸ்டாலின் ஆவேசம்!
மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக அரசு பெரும் துரோகமிழைத்துள்ளதாக முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள விவசாய மசோதாவிற்கு தேசிய அளவில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மத்திய அரசின் இந்த மசோதாவை எதிர்த்து பாஜக கூட்டணியில் உள்ள அகாலிதள அமைச்சர் தனது பதவியையே ராஜினாமா செய்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதற்கு விசிக, கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிமுக ஆதரவு தெரிவித்தது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் சட்டங்களுக்கு அதிமுக ஆதரவு அளித்து விவசாயிகளுக்கு பெரும் துரோகத்தை செய்துள்ளது. இனி ஒருபோதும் எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ள கூடாது” என்று கூறியுள்ளார்.