தற்குறி சூர்யாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: ஜீவஜோதி

தற்குறி சூர்யாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
siva| Last Updated: வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (19:02 IST)
தற்குறி சூர்யாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
சூர்யா ஒரு தற்குறி என்றும் அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று ஜீவஜோதி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாஜக தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜீவஜோதி நடிகர் சூர்யா சமீபத்தில் குறித்து வெளியிட்ட அறிக்கை குறித்து மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

சூர்யாவுக்கு பதில் சொல்லி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்த அவர் தகுதியான நல்ல மருத்துவர்களை உருவாக்கும் நோக்கத்திற்காக கொண்டு வந்த நீட் தேர்வை அரசியலுக்காக அரசியல் செய்வது வருத்தமாக இருப்பதாக தெரிவித்தார்

மாணவர்களை திசை திருப்பும் வேலைகளை எதிர்க்கட்சிகள் செய்து வருவதாகவும் நீட் தேர்வை விமர்சனம் செய்யும் சூர்யா ஒரு தற்குறி என்றும் அவர் அவருக்கெல்லாம் பதில் சொல்லி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்

மேலும் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பிரதமர் மோடியின் பிறந்தநாள் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டதாகவும் தமிழகத்தில் பாஜக அமோக வளர்ச்சி அடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :