1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 5 ஜனவரி 2022 (07:27 IST)

ஆளுனர் உரையுடன் இன்று தொடங்குகிறது சட்டப்பேரவை: முக்கிய அறிவிப்புகள் உண்டா?

தமிழக சட்டப்பேரவை இன்று ஆளுநர் உரையுடன் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ஆளுநர் உரையில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஒரு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்வது மற்றும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நிதி ஒதுக்கீடு செய்வது போன்றவை குறித்து முதல்வர் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
மேலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடு விதிப்பது குறித்தும் முதல்வர் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது