1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Stalin meet TN Governor about Kodanadu issue

கொடநாடு விவகாரம்: ஆளுனரை சந்திக்கின்றார் ஸ்டாலின்

கொடநாடு
கொடநாடு விவகாரம் குறித்த வீடியோ ஒன்றை மேத்யூஸ் என்ற பத்திரிகையாளர் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கொடநாடு விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் மனு அளிக்கவுள்ளார். ஸ்டாலின் மனுவுக்கு ஆளுனர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தை அடுத்து புதுச்சேரியிலும் இதற்குத் தடை !