புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 13 ஜனவரி 2019 (14:54 IST)

சாதிக் பாஷா மரணத்தை விசாரிக்கலாமா? ஸ்டாலினுக்கு செக் வைத்த சி.வி.சண்முகம்

கொடநாடு விஷயத்தில் தீவிரம் காட்டும் ஸ்டாலின், சாதிக் பாஷா கொலை வழக்கைப் பற்றி பேச தயாரா என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக வெளியான வீடியோ தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோ ஒரு திட்டமிட்ட சதி என்றும், இந்த வீடியோ வெளியிட்டவர் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.
மேலும் கொடநாடு மர்மம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமெனவும் குற்றவாளி என கருதப்படும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டுமெனவும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கொடநாடு விவகாரத்தில் எங்கள் மீது கலங்கம் ஏற்படுத்த ஸ்டாலின் திட்டமிடுவதாகவும் அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாஷா கொலையை விசாரிக்க மு.க.ஸ்டாலின் தயாரா? என கேள்வி எழுப்பினார்.