கொடநாடு விவகாரம்: டெல்லியில் இருவரை கைது செய்த தமிழக போலீஸ்

Last Modified ஞாயிறு, 13 ஜனவரி 2019 (21:46 IST)
கொடநாடு விவகாரம் குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோவில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரையும் தமிழகத்தில் இருந்து டெல்லி சென்ற தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் நாளை சென்னை அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயன் ஆகியோர் சர்ச்சைகுரிய வகையில் வீடியோவில் பேசியிருந்தனர். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் மேத்யூ மற்றும் சயன் ஆகியோரை விசாரணை செய்ய டெல்லி சென்றிருந்த துணை ஆணையர்கள் தலைமையிலான இரு தனிப்படை போலீஸார் இன்று துவாரகா பகுதியில் இருந்த, சயன், மனோஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விரைவில் மேத்யூஸ் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :