1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 9 ஜூன் 2022 (10:31 IST)

நான்காவது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி: ரெப்போ வட்டி விகிதத்தால் சரிவு என தகவல்!

share
இந்த வாரம் திங்கள் செவ்வாய் புதன் ஆகிய மூன்று நாட்களும் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சரிந்தது என்பதும் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி சரிந்தது என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் நான்காவது நாளாக இன்றும் சென்செக்ஸ் மற்றும் நிப்டி காலையில் சரிந்து இருந்தாலும் சற்று முன் ஓரளவு உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 சற்று முந்தைய நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3 புள்ளிகள் உயர்ந்து 54900 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 5 புள்ளிகள் உயர்ந்து 16,360 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது