செவ்வாய், 20 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 8 ஜூன் 2022 (10:16 IST)

3வது நாளாக தொடர்ந்து சரியும் சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் கவலை

Share Market
இந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்தது என்பதையும் அதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள் என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்றும் சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று காலை மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் தொடங்கிய நிலையில் தற்போது 350 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 54 ஆயிரத்து 755 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
 
அதே போல் தேசிய பங்குச்சந்தை சுமார் 100 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 16310 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வாரத்தின் முதல் மூன்று நாட்களும் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனினும் வருங்காலத்தில் பங்குச்சந்தை எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது