வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2023 (07:58 IST)

இன்று காலை 9.30 மணிக்கு பொதுத்தேர்வு அட்டவணை: வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் நடைபெறவுள்ள 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை இன்று காலை 9:30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் ஏப்ரல் மாதங்களில்  10, 11, 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறும். இந்த நிலையில் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து  பொதுத்தேர்வுக்கான தேதிகளை முடிவு செய்வதில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக ஆலோசனையில் இருந்தனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் இன்னும் ஒரு சில நாட்களில் பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்

இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  10, 11, 12ம் வகுப்பிற்கான பொது தேர்வு அட்டவணையை வெளியிடுகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் தேதியை கணக்கில் கொண்டு பொதுத்தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Edited by Siva