ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (09:13 IST)

பெட்ரோல் விலை : இன்றைய நிலவரம்!

கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த பெட்ரோல் சில நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. 

அந்த வகையில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.28  காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 65.71  காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

 நேற்றும் இதே விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை ஆன நிலையில் இன்றும் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி அதே விலையில் விற்பனை தொடர்கின்றன. 

கடந்த ஐந்து நாட்களாக எந்த விலை மாற்றமும் இன்றி பெட்ரோல் டீசல் விற்கப்படுகிறது.