ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (23:46 IST)

கோவிட் 2DG மருந்து ஒன்றின் விலை ரூ990/-

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தயாரித்த கொரோனா வைரஸ் மருந்தான 2DG மருந்து ஒன்றின் விலை ரூ990/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய இந்த மருந்தை அவசரகால தேவைக்கு பயன்படுத்த இந்தியாவின் முதன்மை மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தது.

2-டியாக்சி-டி-குளுக்கோஸ் என்று பெயரிப்பட்டுள்ள இந்த மருந்து, ஹைதராபாதில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒரு பிரிவும் இணைந்து உருவாக்கியதாகும்.

இந்த மருந்தை கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து சோதனை செய்த போது, இதில் உள்ள மூலக்கூறு, அவர்கள் விரைவில் குணமடையவும், அவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்துவதற்கான தேவை குறையவும் பயன்படுகிறது என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த மருந்தின் ஒரு பொட்டலம் விலை தற்போது ரூ990/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொடி வடிவில் வரும் இந்த மருந்தை நோய் தொற்று உள்ளவர்கள் தண்ணீரில் கலந்து குடிக்கவேண்டும்.

இந்த மருந்து, அரசு மருத்துவமனைகள், மத்திய, மாநில அரசுகளுக்கு, தள்ளுபடி விலையில் அளிக்கப்படும் என்று பெயர் குறிப்பிடப்படாத அரசு அதிகாரிகள் தெரிவிப்பதாக ஏன்.என்.ஐ செய்தி முகமை கூறியுள்ளது.