1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (11:59 IST)

சென்னையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் இடமாற்றப்படுகிறதா?

Republic
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா மற்றும் சுதந்திர தினவிழா காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே கொண்டாடப்படும் என்பதும் கடந்த 50 ஆண்டுகளாக இந்த இடத்தில்தான் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை போடப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பாதைக்காக காந்தி சிலை தற்போது வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது. 
 
இதனை அடுத்து வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாட்டம் இடம் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் குடியரசுதினவிழா உழைப்பாளர் சிலை அருகில் அல்லது விவேகானந்தர் இல்லம் முன்பு நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த இரண்டு இடங்களில் பாதுகாப்பான இடம் எது என்பது என்பதை ஆய்வு செய்து அதன் பிறகு குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெறும் இடம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தமிழக அரசு துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran