1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (08:14 IST)

101வது நாளாக மாற்றமில்லா பெட்ரோல், டீசல் விலை: இன்னும் சில நாட்கள்தான்....

கடந்த நூறு நாட்களாக தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்ற நிலையில் 101 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் அதே நேரத்தில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவடைந்தவுடன் மிகக் கணிசமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இன்னும் சில நாட்கள் தான் இந்த மாற்றம் இல்லா பெட்ரோல் டீசல் விலை என்று கூறப்பட்டு வருகிறது. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து இருப்பதால் இன்னும் ஒரு சில நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்ற தகவல் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.