செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 4 நவம்பர் 2021 (08:19 IST)

கலால் வரியை குறைத்ததால் பெட்ரோல், டீசல் விலை சரிவு!

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை குறைத்ததன் காரணமாக சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மத்திய அரசு நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக அறிவித்தது. இதனையடுத்து இன்று பெட்ரோல் விலை சென்னையில் லிட்டருக்கு5 ரூபாய் 26 காசுகள் குறைந்துள்ளதால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40 என விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் டீசல் விலை ரூபாய் 11 ரூபாய் 16 காசுகள் குறைந்து உள்ளதை அடுத்து ரூ.91.43 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டது அதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை கணிசமாக அளவு சரிந்துள்ளது பொது மக்களுக்கு கிடைத்த தீபாவளி பரிசாக கருதப்படுகிறது