புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 3 நவம்பர் 2021 (08:00 IST)

பெட்ரோல் டீசல் விலை இன்றும் மாற்றமா?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் நேற்று வரை தினமும் முப்பது காசுகளுக்கும் மேல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த நிலையில் இன்று பெட்ரோல் டீசல் விலை எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 106.66 என்ற விலைக்கு ஒரு லிட்டர் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது அதே போல் நேற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் இன்றும் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை சென்னையில் 102.59 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது