1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 8 மே 2023 (07:41 IST)

வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு.. 5 நாட்களுக்கு வெளுக்க போகும் மழை..!

வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதை அடுத்து ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த காற்றழுத்த தாழ்வு மே ஒன்பதாம் தேதி காற்றழுத்தம் மண்டலமாக வலுவடைந்து அதன் பின் புயலாக மாற வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தற்போது அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் காற்றழுத்த தாழ்வுக்கு காரணமாக மழை பெய்யும் என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva