வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 7 மே 2023 (14:34 IST)

உருவாகிறது ‘மோக்கோ’ புயல்.. இன்று 18 மாவட்டங்களில் கனமழை..!

தமிழ்நாட்டில் இன்று காற்றழுத்து தாழ்வு உருவாகும் எனவும், மோக்கோ புயல் உருவாகும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என்றும் அதேபோல் நீலகிரி, கோவை, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னையை பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்தில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva