புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 1 ஜூலை 2019 (13:24 IST)

மாநிலங்களவைத் தேர்தல் – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு !

ஜூலை 18 ஆம் தேதி நடக்க இருக்கும் மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடக்க இருக்கிறது. சட்டமன்றத்தில் உள்ள தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தின்படி, திமுகவுக்கு 3 மாநிலங்களவை உறுப்பினர்களை பெறும் தகுதி உள்ளது. தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் திமுக தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வேட்பாளர்கள் அறிவிப்புத் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் மூன்று இடங்களில் இரண்டு இடங்கள் திமுக வேட்பாளர்களுக்கும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மதிமுகவுக்கும் ஒதுக்கப்படுகிறது. திமுக வேட்பாளர்களாக தொமுச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் போட்டியிடுவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.