செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (10:06 IST)

ரஜினிக்கு ஒரு கோடி இந்துக்களின் வாக்கு நிச்சயமாக்கியுள்ளது – எஸ் வி சேகர் கருத்து!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது உறுதியாகியுள்ளதை அடுத்து அவருக்கு ஆதரவாக எஸ் வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக அரசியலுக்கு வருவதாக சொல்லி சொல்லி ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி இன்று தனது அரசியல் வருகையை உறுதி செய்துவிட்டார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள ரஜினிகாந்த் ”கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றும் பின் வாங்க மாட்டேன். ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் நிச்சயம் நடக்கும், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கொரோனாவால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. எனினும் இந்த அரசியலில் ரான் வெறும் கருவிதான். மக்கள்தான் என்னை இயக்குபவர்கள். இந்த தேர்தலில் வென்றாலும், தோற்றாலும் அது மக்களுடைய வெற்றி அல்லது தோல்விதான்” என கூறியுள்ளார். மேலும் கட்சிக்கு இரண்டு பொறுப்பாளர்களாக அர்ஜுன் மூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் ஆகியோரை நியமித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினிக்கு பல தரப்பிலும் இருந்து ஆதரவுக்குரல்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் ரஜினியின் நண்பரும் பாஜக ஆதரவாளருமான எஸ் வி சேகர் ‘நாம் நிச்சயமாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, நேர்மையான, ஊழலற்ற, வெளிப்படையான் ஆன்மிக அரசியலை வெளிப்படுத்துவோம். கண்டிப்பாக ஒரு அதிசயம் ரஜினி மூலமாக நடக்கும். ஒரு கோடி இளைஞர்களின் வாக்கு உறுதியாகிவிட்டது.’ எனக் கூறியுள்ளது.