Daily Horoscope
✕

மீண்டும் 40 ஆயிரத்திற்குள் வந்த தங்கம் விலை: இன்று பெரும் சரிவு

Written By Mahendran
Updated: புதன், 20 ஏப்ரல் 2022 (09:58 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 68 ரூபாய் குறைந்து ரூபாய் 4957.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 544 குறைந்து ரூபாய் 39656.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5356.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 42848.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 150 காசுகள் குறைந்து ரூபாய் 73.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 73500.00 எனவும் விற்பனையாகி வருகிறது

எல்லாம் காட்டு

விமானத்தில் அனுமதி மறுப்பு - ஏர் இந்தியாவுக்கு ரூ.25 லட்சம் அபராதம்...

அமெரிக்காவில் எல்லா குழந்தைகளுக்கும் 2 Space பங்குகள் - எலன் மஸ்க் அதிரடி அறிவிப்பு

நான் எடுத்த ஆக்சனில் சிலருக்கு பேஸ்மெண்ட் ஆடிப்போச்சி - முதல்வர் விஜய் பேச்சு...

அய்யய்யோ வந்துட்டாரே.. கலாய்ப்பாரே!.. விஜய் டிவி ராமர் ஸ்டைலில் விழாவில் நக்கலடித்த விஜய்...

63 வயதான பெண்ணை கைப்பிடித்த 73 வயது நபர். முதியோர் இல்லத்தில் நடந்த திருமணம்...

அடுத்த கட்டுரையில்
Show comments