வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 5 ஏப்ரல் 2021 (23:53 IST)

தேர்தல் முடிந்தவுடன் உதயநிதி நடிக்கவுள்ள படம் இதுதான் !

தமிழகத்தில் நேற்றுடன் சட்டமன்றத் தேர்தலுக்காக பிரச்சாரம் ஓய்ந்துள்ளது. இந்நிலையில் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் பொதுத்தேர்தல் முடிந்தபின் மீண்டும் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ஆர்டிக்கில் 15 படத்தில் தமிழ் ரீமேக்கில் உதயநிதி நடிக்கவுள்ளார். இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளார். இந்தியில் ஆயுஸ்மான் நடித்த போலீஸ் அதிகாரி வேடத்தின் உதயநிதி நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.