செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 21 ஜூன் 2021 (12:57 IST)

ஆளுநர் உரை பெரும் ஏமாற்றம் அளிக்கிறது: மூடி மறைக்கப்படும் தேர்தல் வாக்குறுதிகள்!

தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று கூடியது. இது முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் கூட்டத்தொடராகும். 
  
இந்த கூட்டத்தில் தமிழக அரசின் கொள்கை அறிக்கையை வாசித்த ஆளுநர், குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை அறிவிக்கவில்லை. அதோடு, கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் கூட ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. விவசாய கடன் ரத்து செய்யப்பட்ட ரசீது இன்னும் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட வில்லை. ஆளும் கட்சி மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் இவைகள்  இடம்பெறாதது பெரும் ஏம்மாற்றத்தை அளிக்கிறது.