வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2024 (08:14 IST)

இன்று அனுமன் ஜெயந்தி.. தமிழ்நாடு முழுவதும் பக்தர்கள் கொண்டாட்டம்..!

Anjaneyar
தமிழ்நாடு முழுவதும் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா பக்தர்களால் இன்று கொண்டாடப்பட்டது

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில் இன்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயர் ஆலயங்களில் வழிபாடு செய்தனர்

பல வகையான வாசனை திரவியங்களால் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது என்றும், நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து எட்டு வடை மாலை சாற்றி அனுமனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


அனுமன் ஜெயந்தி என்பது இந்து கடவுள் ஆஞ்சநேயரின் பிறந்தநாளை நினைவுகூரும் ஒரு இந்து பண்டிகை. இது ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. ஆஞ்சநேயர் வாயு பகவானின் அம்சம் என்று நம்பப்படுகிறது, மேலும் அவர் ராமாயணத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் என்பதும் அவர் தனது பக்தி, வலிமை மற்றும் ஞானத்திற்காக மக்களால் வணங்கப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது,.

Edited by Siva