ராமர் கோவில் திறப்பு விழா: காங்கிரஸை அடுத்து சமாஜ்வாதி கட்சியும் புறக்கணிப்பு..!
ராமர் கோவில் திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளாது என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று சமாஜ்வாதி ஜனதா கட்சியும் கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அயோத்தியில் ராமர் கோயில் வரும் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் நாடு முழுவதிலும் இருந்து பல அரசியல் பிரமுகர்கள் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து சோனியா காந்தி உள்பட யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பை சமாஜ்வாதி கட்சியும் புறக்கணித்து உள்ளதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ராமர் கோயில் அழைப்பை புறக்கணித்த நிலையில் தற்போது சமாஜ்வாதி கட்சியின் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் லாபத்திற்காக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இணைந்து நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
Edited by Siva