ஒரே நாடு ஒரே தேர்தல்: 5000 பேர் கருத்து.. எத்தனை பேர் ஆதரவு..!
இந்தியாவில் விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இது குறித்து கருத்துக்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது என்பதும் அதற்கான பிரத்யேக இணையதளம் அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் இந்த அறிவிப்புக்கு இதுவரை 5000 பேர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 3600 பேர் ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிப்பதாகவும் 1600 பேர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும் 200 பேர் நடுநிலை தெரிவித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
தேர்தல் செலவுகள் குறையும், நிர்வாக சிக்கல்கள் குறையும், அரசியல் ஸ்திரத்தன்மை அதிகரிக்கும், தேர்தல் பிரச்சாரத்தால் ஏற்படும் இடையூறுகள் குறையும் என ஆதரவாளர்களும், மாநிலங்களின் அதிகாரம் பலவீனமடையும், தேர்தல் பிரச்சாரம் பாதிக்கப்படும், ஒரு கட்சி ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது போன்று எதிர் கருத்துக்களும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva