5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!
இன்றும் நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக இந்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் சென்னை நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது