1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 3 ஜூலை 2022 (11:07 IST)

மின்னல் தாக்கி 10 பேர் பலி - பீகாரில் சோகம்!

மின்னல் தாக்கி மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. 

 
பீகாரில் கடந்த சில வாரங்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அப்போது, சரண் மாவட்டத்தில் ஆறு பேரும் , சிவான், ஹாஜிபூர், பாங்கா மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டங்களில் தலா ஒருவரும் மொத்தம் 10 பேர் பலிமின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. 
 
பீகாரில் கடந்த ஜூன் 24 ஆம் தேதி முதல் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கியதால் உயிரிழந்துள்ளனர். கடந்த 17 ஆம் தேதியன்று பீகாரில் இடி, மின்னல் தாக்கியத்தில் 17 பேர் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மக்கள் பேரிடர் மேலாண் கழகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். மோசமான வானிலையின் போது வீட்டிலேயே பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.