தொடர்புடைய செய்திகள்
- பட்ஜெட் விலையில் இந்தியா வருகிறது ரெட்மி நோட் 10! – வெளியாகும் தேதி அறிவிப்பு!
- சென்னையில் தங்கம் விலை மீண்டும் குறைவு! – இன்றைய நிலவரம் என்ன?
- சென்னையில் ரூ.90ஐ தாண்டிய பெட்ரோல் விலை: முடிவே இல்லையா?
- இலங்கையை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் ஏன்? அமைச்சர் விளக்கம்!
- திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம்! – கரூர் பெட்ரோல் பங்கில் குவியும் கூட்டம்!
எதிர்க்கட்சிகளின் கண்டனத்திற்கு பின்னரும் ஏறி வரும் பெட்ரோல் விலை!
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டிருப்பதை அடுத்து நாடாளுமன்றத்தில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எம்பிக்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
எதிர்க்கட்சிகளின் கண்டனத்திற்கு பின்னராவது பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் பெட்ரோல் விலை உயர்ந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து உள்ளது என்பதும் இன்று 90.44 ரூபாய் என்ற விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து உள்ளது என்பதும் சென்னையில் இன்றைய டீசலின் விலை 83.52 ரூபாய் என விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
பெட்ரோல் விலை ரூ.100ஐயும், டீசல் விலை ரூ.90ஐயும் நெருங்கி வருவதை அடுத்து வாகன பயனாளிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பதும் இதனால் விலைவாசியும் கடுமையாக உயரும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
