தொடர்புடைய செய்திகள்
- எந்தெந்த வகுப்புகளுக்கு எப்போது பள்ளிகள் தொடக்கம்! – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
- செல்போன் சார்ஜரை கழற்றியபோது பாய்ந்த மின்சாரம்! – மாணவன் பரிதாப பலி!
- வேர்கடலை பற்றிய முக்கிய தகவல்
- மாரடைப்பு நோயாளிகளின் ரத்தத்தில் செல்கள் எப்படி இருக்கும்?
- இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக 67 பேர் கைது
14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் அக்கினி வெயில் நடந்து வரும் நிலையில் இன்று 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 4ம் தேதி அக்கினி வெயில் தொடங்கிய நிலையில் வெயில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்க கடலில் உருவான புயல் காரணமாக பெய்த மழையால் வெப்பம் குறைவாகவே இருந்தது.
தற்போது 28ம் தேதியுடன் அக்கினி வெயில் முடிவடைய உள்ள நிலையில் ஆங்காங்கே வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதன்படி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சி, தேனி, திண்டுக்கல், கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
