திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (11:39 IST)

அக்கினி நட்சத்திரம் முடிந்தாலும் உக்கிரம் குறையாது! – இனி வெயில் எப்படி இருக்கும்?

அக்கினி நட்சத்திரம் நாளையுடன் முடிவடைந்தாலும் வெயிலின் தாக்கம் தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 4ம் தேதி அக்கினி வெயில் தொடங்கிய நிலையில் வெயில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்க கடலில் உருவான புயல் காரணமாக பெய்த மழையால் வெப்பம் குறைவாகவே இருந்து வந்தது.

தற்போது நாளையுடன் அக்கினி நட்சத்திரம் முடிவடைகிறது. ஆனால் இதுவரை தமிழகத்தில் சில பகுதிகளில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானாலும் பல பகுதிகளில் நல்ல மழையும் பெய்துள்ளது. இதனால் அக்கினி வெயில் முடிந்தாலும் அடுத்து சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.